Nraj Sri

Spiritual Information Storage

ஆன்மீக தகவல் - YouTube

ஆன்மீக தகவல்கள், சித்தர்கள் பற்றிய தகவல்கள், திருவருட்பா, திருவாசகம், ஆன்மிகம் சார்ந்த சிந்தனைகள் போன்ற பதிவுகள் இதில் இடம் பெரும்.

Tuesday, October 29, 2019

சிவபுராணம் - மெய் உருகும் மெல்லிய கானம் - Sivan Songs


Nraj Sri Songs
சிவபுராணம் - மெய் உருகும் மெல்லிய கானம் - Sivan Songs

சிவலோக இசை - Shivaloga Music - Nraj Sri Videos

 Nraj Sri Videos

சிவலோக இசை -  Shivaloga Music
Nraj Sri Videos
Sunday, October 27, 2019

நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட!

செய்வினை கோளாறுகள்


இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய வேண்டும்.

ஆகாசதாமரை செடியை வியாழன் அன்று பறித்தோ (ஏரி மற்றும் நீர் நிலைகளில் காணப்படும்)அல்லது வாங்கியோ முழுவதுமாக ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத படி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில் மாட்டி விட வேண்டும். இதை எவரும் தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும். தொட்டால் பரிகாரம் தடை படும். 45 நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம். பலன் அளிக்கும் பரிகாரம் இது என்கிறது தாந்த்ரீகம்.

நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட "உப்பு நீர்" பரிகாரம்

சோம்பேறித்தனம்

என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை

நேரம் தவறுதல்- வேகமின்மை

தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்

கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள்

மன அழுத்தம்

திடீர் உடல் நிலை கோளாறுகள்

திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள்

செய்வினை கோளாறுகள்

மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர்

பேய் அல்லது ஆவிகள் அல்லது துர்ஆத்மாவினால் பயம்

மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்" பரிகார முறையை பின்பற்றஅனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.

தேவையானவை :

1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக் சால்ட்

(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)

பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும், சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.

வேலை மாற்றத்திற்கு :

அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள் அணிந்து 11 சிவப்பு மிளகாய்களை எடுத்து கொண்டு

வேலை மாற்றத்திற்காண வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து விடவேண்டும். இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர வேண்டும். இதற்கிடையில் வேலை மாற்றம் ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.

வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு :

1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.

2. வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.

3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.

4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.

5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும்.

கடன் தொல்லை :

1. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும்.

2. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.

3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம் பருப்பை மறு நாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம்.

4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.

5. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.

6. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்.

இழந்ததை பெற மேலும் இழக்காமல் இருக்க

ஒவ்வொரு திங்களும் அரச மரத்து இலைகள் 11 பறித்து அதில் 4 முறை சிகப்பு சந்தனத்தால் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) "ராம் ராம்" (இரண்டிரண்டாக 4 முறை) மேலிருந்து கீழ் எழுதி அந்த 11 இலைகளையும் ஏதாவது ஒரு அனுமன் கோவிலில் சென்று வைத்து விட்டு அனுமானை வழிபட்டு வர ஆஞ்சநேயன் நாம் இழந்த பொருள்,நஷ்டம் அனைத்தையும் திரும்ப பெற செய்வார் என்பது உறுதி. நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வர நலம் பெறலாம்.

சகலமும் வசியமாக பழங்கால முறை

சுத்தமான கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன் கலந்தும், திங்கள் வியாழன் நேய்யுடன் கலந்தும், செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும் மையாக இட்டு செல்ல அனைத்தும் வசியமாகும்.வேண்டிய காரியம் சித்திக்கும்.

ஜோதிட சூச்சும பரிகாரங்கள்

திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர பண வருவாய் அதிகரிக்கும்.

திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.

வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட சுபிட்சம் பெறலாம்.

பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.

எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்-

(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.

(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.

(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.

(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு. (5) அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்- தொடர்ச்சி 2

(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும்.

(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும்.

(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

(4) நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.

(5) பூர்வீக சொத்து கிடைக்க வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வாங்கி வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால் 27 வாரங்கள் (செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.

(6) சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும்.எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்- தொடர்ச்சி

(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும். எந்த கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன பலன்கள் ?? ஞாயிறு- ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்

திங்கள் - தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்

செவ்வாய் - எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன் நிவர்த்தி.

புதன் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.

வியாழன் - சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.

வெள்ளி -லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.

சனி - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிட்டும். ருத்ராக்க்ஷ பரிகாரங்கள்-தொடர்ச்சி

(1) பெரிய அளவில் செய்யப்படும் புதிய முயற்சிகள், பெரிய தொழிற்சாலை, ப்ராஜெக்ட்

18 முகம்

(2) குழந்தைகளுக்கு தீர்க்க முடியாத வியாதிகள், உடல் நல கோளாறு

12 முகம்

(3) பொருளாதார வளர்ச்சி, எதிர்காலத்தை அறியும் தன்மை

15 முகம்

(4) எல்லா வித பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு

ஒன்று முதல் 14 வரையிலான முகங்கள் மற்றும் கணேசா

ருத்திராக்ஷம், கௌரிஷங்கர் கொண்ட சித்த மாலை

(5) உச்ச நிலை தியானம்,ஆன்மீகம் கைகூட

ஒன்று,மூன்று,ஐந்து,ஒன்பது, பதினொன்று,மற்றும் கௌரிஷங்கர்

(6) வெளிநாட்டில் வாழ்ந்து முன்னேற்றம் இல்லாத நிலை மற்றும் பாதுகாப்பு

சித்த மாலை அல்லது பதினோரு முகம்

(7) எந்த துறையிலும் பிரகாசிக்க

பதினான்கு / பதினேழு / பத்தொன்பது / இருவது முகம்

(8) ஆன்மீகத்திலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கும்.

SOURCE: sssjna

Saturday, October 26, 2019

ஏவல் பில்லி சூன்யம் இதை வைத்துதான் செய்கிறார்கள்!

 manthrigam in tamil

ஏவல் பில்லி சூன்யம் செய்வதில் பல வகைகள் முறைகள் உண்டு. அதில் சில முறைகளை இங்கே காண்போம்.

1. காலடி மண்:


ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.

2.சுடுகாட்டு சாம்பல்:


ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும். இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.

3.முட்டை:


ஏவல் பில்லி சூன்ய வகைகள் மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.

4.எந்திர தகடு:


ஏவல் பில்லி சூன்ய வகைகளில் நான்காவது முறை செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.

5. சுண்ணாம்பு:


ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.

6. எலுமிச்சை:


ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.

7. மந்திர பாவை (பொம்மை):


ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.

ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.

Friday, August 30, 2019

Today Rasi Palan - இன்றைய ராசிபலன் ஆங்கிலதேதி 31 08 2019

Today Rasi Palan - இன்றைய ராசிபலன் ஆங்கிலதேதி 31 08 2019

மேஷம்: இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களுக்கு சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டைப் பெற்றுத் தரும். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு, ஊதா மஞ்சள். அதிஷ்ட எண் 1 3 5 9 

ரிஷபம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதுரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடியே நிதிநிலைமை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகம் இருக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், நீலம். அதிஷ்ட எண் 1 3 9 

மிதுனம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன்-மனைவிக்கிடையே கோபத்தை விட்டு விட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட எண் 3 6 9 

கடகம்: இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும், குழந்தைகள் உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண் 6 9 

Today Rasi Palan - இன்றைய ராசிபலன் ஆங்கிலதேதி 31 08 2019

சிம்மம்: இன்று எதிர்ப்புகள் விலகும் பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் நீலம், பச்சை. அதிஷ்ட எண் 2 7 

கன்னி: காரிய தடைகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்துசேரும். திடீர் கோபங்கள் ஏற்படும், எதிர்பாலினரிடம் கவனமாக பழகுவது அவசியம். இன்றைய அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், நீலம். அதிர்ஷ்ட எண்-3 5 

துலாம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் மன திருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்சனுடன் காணப்படுவார்கள். நிலுவையிலுள்ள தொகைகள் வந்து சேரலாம். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. அதிஷ்ட எண் 1 3 9 

விருச்சகம்: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமைகள் வரும், பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெளிர் நீலம், மஞ்சள். அதிஷ்ட எண் 4 6 

Today Rasi Palan - இன்றைய ராசிபலன் ஆங்கிலதேதி 31 08 2019

தனுசு: அடுத்தவர்களின் செயல்களால் கோபங்கள் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். கவனத்தை சிதறவிடாமல் வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம், கூடுதலாக அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்-3 5 

மகரம்: இன்று மனக்கலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு ஆளாக வேண்டிவரும். எதிர்த்து செயல்படுபவர்கள் அடக்கிவிடுவார்கள், பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர் பாலினரின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை, பிரவுன். அதிஷ்ட எண் 2 6

கும்பம்: இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாகவும் இருக்கும். வீண் செலவுகள் உடல்நல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கின்றது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு, வெளீர் பச்சை. அதிர்ஷ்ட எண் 1 5 6 

மீனம்: இன்று மீன ராசிக்காரர்கள் தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும், பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்-3 5 9

Monday, August 19, 2019

மூவகை அணுக்களும் முறைமையால் விந்து ஞானம் மேவினது - சிவஞானசித்தியார்🌙செந்தமிழ்ச் சிவநெறி 🍀 சி.ஞா.சி.சு. - 46(1)

🌻திருச்சிற்றம்பலம்🌻

🙏🌻எம்பிரான் அருட்குருநாதர் அம்மாவின் அருட்சேவடி போற்றி🌻🙏 
🙏🌻எம்பிரான் அருணந்தி பெருந்தகையார் நற்றாள் போற்றி🌻🙏
🙏🌻சிவஞானசித்தியார் சுபக்கம்🌻🙏
🙏பிரமாணவியல் /முதல் சூத்திரம்🙏
🌹சுபக்கம் செய்யுள் எண்: 46🌹

🙏🌻மூவகை அணுக்களும் முறைமையால் விந்து ஞானம்
மேவினது இல்லை ஆகில் விளங்கிய ஞானம் இன்றாம்
ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியினான் தன் சேவடி சேரலாகும்.🌻🙏

🙏இன்றைய சிந்தனையில் அருணந்திப் பெருந்தகையார், சுத்தமாயையின் காரியமாக இருக்கக்கூடிய, இந்த "வாக்கு" இல்லாது எவருக்கும் "ஞானம்" கிடைக்காது! "ஞானம்" கிடைக்காத யாரும் "சிவபெருமானை" அடைய முடியாது! என்பதை மிகச் சிறப்பாக சொல்லி இருக்கின்றார்கள்.🙏 Shop Now Sticker by MineTan Body Skin🙏சுத்தமாயையின் காரியமாக சொல்லக்கூடிய இந்த "வாக்கு" எல்லாருக்குமே உரியது ஆகும். சகலருக்கும் உரியது. பிரளயாகலருக்கும் உரியது, விஞ்ஞானகலருக்கும் உரியது, அதற்கு மேல் சொல்லக்கூடிய "அபர முக்தர்களுக்கும்" உரியது. இந்த வாக்கு இல்லாமல் "ஞானம்" விளங்கி ஒருவருக்குத் தோன்றாது! "அந்த ஞானம் தோன்றாது, இடபக்கொடியை உயர்த்தி இருக்கக்கூடிய நம் "சிவபெருமானின் திருவடி" என்று சொல்லக்கூடிய பரமுக்தியை அடைய முடியாது! ஆதலால் வாக்கு என்பது எல்லோருக்கும் சுத்தமாயையில் இருந்து கொடுக்கப்படுகின்ற ஒன்று தான்! என்பதை மிகச் சிறப்பாக இந்த செய்யுள் பாடலில் சொல்லி அருளி இருக்கின்றார்கள்.🙏

🙏செய்யுள் முதற்கூறு:

🙏மூவகை அணுக்களும் முறைமையால் விந்து ஞானம் மேவினது இல்லை ஆகில் விளங்கிய ஞானம் இன்றாம்🙏

🙏இப்போது, நாம் மேலே பார்த்தோம்! முன்பு உள்ள செய்யுள்களில் வாக்குகள் நான்கு, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்று சொல்லக்கூடிய வாக்கு. இதில் பகுத்து உணர்வதாகிய சவிகற்ப ஞானத்திற்கு ஏதுவாக இருக்கக்கூடியது, சென்ற பாடலில் நாம் சிந்தித்த மந்திரேசுவரர், மந்திர மகேசுவரர், அணுசதாசிவர் ஆகிய "அபர முக்தர்கள்" மூவருக்கும், ஒரு மலம் மட்டும் உடைய விஞ்ஞானகலருக்கும், இரண்டு மலங்கள் உடைய பிரளயாகலருக்கும், மூன்று மலங்கள் உடைய சகலர் ஆகிய நமக்கும் இந்த நான்கு வாக்குகள் என்பது எங்கே இருந்து கொடுக்கப்படுகின்றது எனில் "சுத்தமாயா" காரியத்தில் இருந்து கொடுக்கப்படுகின்றது.🙏

🙏இந்த உடம்பின் வேறுபாடு காரணமாகத் தான் விஞ்ஞானகலருக்குத் "தூலம்" ஆக இருக்கின்றது. பிரளயாகலருக்கு "தூலதரம்" ஆக இருக்கின்றது. சகலர் ஆகிய நமக்குத் "தூலத்தமம்" ஆக இருக்கின்றது. அது என்ன? தூலம்? தூலதரம்? தூலதமம்? எனில் "தூலம்" என்றால் நன்றாக விளங்கித் தோன்றுதல், "தூலதரம்" என்றால், மேலும் அதிகமாக விளங்கித் தோன்றுவது, அடுத்தது "தூலதமம்" என்றால் குறைவாகத் தோன்றுவது.🙏

🙏"விஞ்ஞானகலருக்கு" நன்றாக விளங்கித் தோன்றுகின்றது. "தூலதரத்துக்கு" நம்மை விட கொஞ்சம் அதிகமாக விளங்கித் தோன்றுகிறது. அடுத்தது "சகலராகிய" நமக்கு குறைவாகத் தோன்றுகின்றது. விஞ்ஞானகலருக்கு விளங்கித் தோன்றியும், பிரளயாகலருக்கு நம்மை விட கொஞ்சம் அதிகமாக விளங்கித் தோன்றியும், நமக்கு குறைவாகத் தோன்றியும் இருக்கக்கூடியது. "இந்த வாக்குகள் இல்லை என்றால், நாம் சொன்ன யாருக்குமே ஞானம் விளங்காது! மூவகை உயிர்களுக்கும், விஞ்ஞானகலருக்கும், பிரளயாகலருக்கும், சகலருக்கும் ஞானம் என்பது விளங்கித் தோன்றாது! தோன்றவேத் தோன்றாது!🙏

🙏செய்யுள் இரண்டாம் கூறு:

🙏ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்🙏

🙏இந்த வாக்குகளினால் உண்டாகக்கூடிய ஞானம், இந்த உலகப் பொருட்களை எல்லாம் அறியக்கூடிய ஞானம். அந்த வாக்குகள் அவர்களுக்கு மேலான ஒன்று! ஏனெனில் சகலருக்குக் கொடுக்கப்படுகின்றது அசுத்தத்திலும் அசுத்தத் தத்துவத்தால் கொடுக்கப்படுகின்ற உலகம்! இந்த ஆன்மத் தத்துவம் என்று சொல்லக்கூடிய இருபத்து நான்குமே அசுத்தத் தத்துவம். ஆனால் நமக்கும் பெருமான் கருணையோடு "சுத்தமாயை" என்று சொல்லக்கூடிய அந்த சிவத் தத்துவத்தில் இருந்து வாக்கினைக் கொடுத்து இருக்கின்றான். அதனால் தான் நாக்கு சுத்தம், வாக்கு சுத்தம் அப்படி என்று சொல்வது எதுக்கு? என்றால் சுத்தத் தத்துவத்திலிருந்து நமக்குக் கொடுக்கப்படுகின்ற ஒன்றே! ஒன்று! என்ன எனில் "வாக்கு" தான்! அதையாவது நாம் சுத்தமா வைத்திருக்கக் கூடாதா? உலகம் அசுத்தத்திலும் அசுத்தம், உடம்பு அசுத்தத்திலும் அசுத்தம், கருவி கரணங்கள் அசுத்தத்திலும் அசுத்தம் எல்லாமே அசுத்தம் ஆகும். ஆனால் இந்த வாக்கை மட்டும் பெருமான் சுத்தத்தில் இருந்து கொடுத்திருக்கின்றார். அதை ஒன்றையாவது நாம் சுத்தமா, பாதுகாப்பா வைத்திருக்கக் கூடாதா? நாக்கு சுத்தம் வேணும்! வாக்கு சுத்தம் வேணும்! அப்படின்னு சொல்லுவோம்! அப்படி நாம் இருந்தால் சுத்தமான இடத்துக்கு நாம் போய்விடுவோம். அதுதான் உண்மை. உண்மையாகவே எதைக் காவா! விட்டாலும் நாவைக் காக்க! என்பது திருவள்ளுவரின் திருவாக்கு, ஏனெனில் அது சுத்தத் தத்துவத்தில் இருந்து கொடுக்கப்படுகின்ற ஒரு புனிதமான ஒரு தத்துவம் அது. புனிதமான வாக்கு அது! அதையும் நாம் அசுத்தம் ஆக்க வேண்டாம்! அந்த ஒன்றைக் காத்துவிட்டாலே மற்ற எல்லாம் சரியாகிவிடும்! என்று சொல்லி இருப்பார் திருவள்ளுவப் பெருந்தகையார். "யாகவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு" (திருக்குறள்). அப்போது அந்த வாக்கினை நாம் பொய்யுரையாது காக்க வேண்டும். அழுக்கடையாது காக்க வேண்டும். ஏனெனில் அது சுத்தமான ஒன்று ஆச்சே! வாக்கு என்பது சுத்தத் தத்துவத்தில் இருந்து கொடுக்கப்படுகின்ற ஒன்று ஆச்சே.! நாம் தான் அழுக்குல இருக்கின்றோம் எனில் அதனையும் அழுக்கு ஆக்கலாமா! ஆக்கக்கூடாது!🙏

🙏இந்த வாக்குகள் இல்லை என்றால் யாருக்குமே "ஞானம்" விளங்கித் தோன்றாது! என்று சொல்கின்றார்கள்.🙏 

🙏செய்யுள் மூன்றாம் கூறு:

🙏சேவுயர் கொடியினான் தன் சேவடி சேரல் ஆகும்🙏

🙏இந்த வாக்குகளை எல்லாம் நமக்கு வேறான ஒன்று! என்று கண்டு நீங்கி, இந்த வாக்கையும் கடந்து ஒரு "பேரறிவு பரம்பொருள்" இருக்கின்றது! என்று திருவருள் கருணையால் நமக்கு விளங்கியது என்றால் அப்போது தான் நமக்கு சேவுயர் கொடியினான் தன்சேவடி சேரல் ஆகும். இடபக் கொடியை உயர்த்தி இருக்கக்கூடிய சிவபெருமான் திருவடியாகிய பரமுக்தியை ஒரு உயிர் தலைப்படும்! அடையும்! என்பதை மிகச்சிறப்பாக சொல்லி இருக்கின்றார்கள்.🙏 

🙏ஆக நான்கு வாக்குகளும் விஞ்ஞானகலருக்கு விளங்கித் தோன்றும். பிரளயாகலருக்கு அவ்வாறு அன்றி சகலரை விட கொஞ்சம் அதிகமாக விளங்கித் தோன்றும். சகலருக்கு பிரளயாகலரை விட சற்று குறைந்து தோன்றும். இது எல்லாமே "சுத்தமாயா காரியம்" என்பதை மிகச் சிறப்பாக இந்த பாடலில் சொல்லி, நமக்கு அருள் செய்து இருக்கின்றார்கள். 🙏

🙏வாக்கை நாம் சுத்தமாக வைத்திருப்போம் ஏனென்றால் அது சுத்தத் தத்துவத்தில் இருந்து கொடுக்கப்படுகின்ற ஒரு புனிதம். நமக்கு கொடுக்கப்பட்ட பெரும்பரிசு ஆகும். ஆக இந்த வாக்குகளே "ஞானம்" விளங்குவதற்கு நமக்கு காரணமாக இருக்கின்றது. அந்த ஞானத்திற்கும் மேலானவன் சிவபெருமான். (செ/ள்) ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல் / வாக்குகளையும் இவைகளை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவன் நம் பெருமான், அப்ப இதையெல்லாம் கடந்து நம்மில் (தத்துவத்தில்) வேறாக இருக்கக்கூடிய நம் சிவபெருமானை அவன் காட்டக் கண்டு, இந்தத் தத்துவங்களை எல்லாம் நீங்கிய பொழுது தான் நம் பெருமானின் திருவடி என்று சொல்லக்கூடிய பரமுக்தியை அடைந்து உய்ய முடியும்! என்பதை சொல்லி நிறைவு பண்ணி இருக்கின்றார்கள். (செ/ள்) "சேவுயர் கொடியினான் தன் சேவடி சேரல் ஆகும்" என்று சொல்லி இருக்கின்றார்கள்.🙏

🙏ஆக, மூன்று வகையான உயிருக்கும், அபரமுக்தர் என்று சொல்லக்கூடிய மந்திரேசுவரர், மந்திர மகேசுவரர், அணுசதாசிவர் என்று சொல்லக்கூடிய அவர்களுக்கும் வாக்கு இன்றியமையாததாக இருக்கின்ற ஒன்று! என்பதை மிகச் சிறப்பாக சொல்லி அருளி இருக்கின்றார்கள்.🙏 

🙏சிவசிவ, சுத்தமாயையின் காரியமாக இருக்கக்கூடிய, இந்த வாக்குகளால் தான் ஒருவர் ஞானம் எய்த முடியும்!, சேவுயர் கொடியினான்" தன் திருவடி இணையினை அடைய முடியும்! என அடியேங்கள் சிந்தை மகிழ்ந்து கேட்டு, தெளிவடைந்து சிவஞானம் எய்தும் வண்ணம் திருவாக்கினை வைகரியில் நாளும் நல்குகின்ற "அருட்குருநாதர் அம்மாவின்" அருட்சேவடிகளையும், நன்றாக நால்வருக்கும் நான்மறையின் உட்பொருளை சூக்குமையில் நல்குகின்ற "அருளரசர் சோமநாதர் பிரான்" அருட்சேவடிகளையும் மனம், மொழி, மெய்களாலே போற்றி செய்து, மீளமீள மீளா அடிமையாகி வணங்கி மகிழ்கின்றோம். உய்கின்றோம்.🙏

🙏சிவசிவ🙏🌹👣🌺🙇
🌻திருச்சிற்றம்பலம்🌻

Thursday, June 27, 2019

கர்ம வினைகளின் வகைகள் - மறுபிறவிக் கோட்பாடுகள் - பிறவிச் சூழல் - படைப்பின் வகைகள்

aanmeega thagaval in tamil

ஓம் நமசிவாய

கர்ம வினைகளின் வகைகள், மறுபிறவிக் கோட்பாடுகள், பிறவிச் சூழல், படைப்பின் வகைகள்

ஒப்புவமையற்ற நமது இந்து தர்ம சாத்திரங்கள் கர்ம வினைகளின் வகைகளாக பின்வரும் மூன்றினை முன்னிறுத்துகின்றது.


aanmeega video tamil

சஞ்சித வினை:எண்ணில் பலகோடி பிறவிகளில் ஒரு ஆன்மா இதுவரையில் சேர்த்து வந்துள்ள நல்வினை; தீவினைகளின் வெளிப்பாடான பாவ புண்ணியத் தொகுப்புகள். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் தனித்தனியே சஞ்சித வினைகளுண்டு.

பிராரப்த வினை:

வினைப் பயன்களை நுகரும் பொருட்டு பிறவியெடுக்கும் ஒரு ஆன்மாவானது அப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டிய, சஞ்சித வினைக்குவியலிலிருந்து எடுக்கப் பெறும் ஒரு சிறு பகுதி. பிராரப்த வினைப் பயன்களை, உரிய காலத்தில், உரிய விதத்தில் அந்தந்த ஆன்மாக்களிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பு மட்டுமே நவ கிரகங்களுக்கு உரியது, வினைப் பயன்களை மாற்றியமைக்கும் அதிகாரம் இறைவனால் கோள்களுக்கு வழங்கப் பெறவில்லை.ஒரு செயல் நமக்கு கைக்கூடாது போயின் 'அதற்கெல்லாம் பிராப்தம் வேண்டும்' என்று உலகியல் மரபில் அனைவரும் குறிப்பது இவ்வினைத் தொகுப்பையே.

ஆகாம்ய வினை:எடுத்துள்ள பிறவியில் ஒரு ஆன்மா புதிதாகப் புரியும் நல்வினை; தீவினைகள் 'ஆகாம்யம்' என்று குறிக்கப் பெறும், இவை பிராரப்த வினைகளுடன் சேராது. ஆகாம்ய வினைகள் உடனுக்குடன் நற்பலனையோ அல்லது தீய பலன்களையோ நல்கி விடாது, விதைக்கும் செயலோடு இதனை ஒப்பிட்டுக் காட்டுவர். 'விதை முளைத்து, செடி கொடி மரமாக பூத்துக் காய்த்துக் கனியும் நிலைகள் போல்' வினைகள் முதிரும் பொழுது மட்டுமே அதற்கான பலன்கள் ஆன்மாக்களை வந்தடைகின்றன. ஆகாம்ய வினைகள் மரணமெய்தும் ஆன்மாக்களுடைய சஞ்சித வினைக் குவியலோடு சென்று சேர்ந்து விடுகின்றது.
ஆகாம்ய வினைகள் மனிதப் பிறவி எடுக்கும் ஆன்மாக்களுக்கு மட்டுமே உரியது, ஓரறிவு முதல் ஐயறிவு உயிரினங்களுக்கு 'இது நற்செயல் - இது தீய செயல்' என்று பகுத்து அறியும் திறனல்லாத காரணத்தால் புதிதாக வினைகளேதும் அப்பிறவிகளில் அவைகளுக்குச் சேர்வதில்லை.

பிறவியின் ஒரே ஆன்ம லட்சியமான சிவமுத்தியினை அடைந்து உய்வு பெறாத ஆன்மாக்கள் இம்முறையில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து உழன்ற வண்ணமே இருக்கும்.


திருவாசகம் - மணிவாசகப் பெருமான்

புல்லாய் பூடாய் புழுவாய் மரமாகிபல் மிருகமாய் மனிதராய் பேயாய் கணங்களாய்வல் அசுரராய் தேவராய் செல்லா நின்றஇத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும்பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மொத்தம் 84 லட்சம் வகையான யோனி பேதங்கள் (பிறவிகள்) இருப்பதாகப் புராணங்கள் குறிக்கின்றன.

அண்டஜம்:

முட்டையிலிருந்து வெளிவரும் பறவை இனங்களில் 21 லட்ச வகை உயிரினங்கள்.

உற்பிஜம்:

பூமியிலிருந்து தோன்றும் தாவரங்கள்; செடி; கொடி; புல்; பூண்டு; மரம் உள்ளிட்ட 21 லட்ச வகைகள்.

ஜராயுஜம்:

கருப்பையிலிருந்து தோன்றும் மானிடர் மற்றும் விலங்குகளில் 21 லட்சம் வகை உயிரினங்கள்.

சுவேதஜம்:

வேர்வை, தண்ணீர் முதலியவற்றில் தோன்றும் கொசு முதலான 21 லட்சம் வகை உயிரினங்கள்.

திருஞானசம்பந்தர் அருளிய 'திருவீழிமிழலை' தேவாரம்:


உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்கோயில்வரைசேரும் முகில்முழவ மயில்கள் பல நடமாட வண்டுபாடவிரைசேர் பொன்னிதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலையாமே.அன்பே சிவம்

Source: Whatsapp Group

Tuesday, May 7, 2019

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம்

lord shiva,lord shiva songs,shiva,lord shiva story,lord shiva mantra songs,lord shiva devotional songs,shiva mantra,lord shiva songs in tamil,shiva songs,about lord shiva,lord shiva pooja,lord shiva mantra,lord shiva bhajans,19 avatars of lord shiva,lord shiva telugu songs,lord shiva bhakti songs,story of shiva,lord shiva devotional songs telugu,lord siva,tamil shiva songs,lord siva songs

SOURCE: சித்தர்களின் ஸ்ரீ சக்கரம்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு

ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு

புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்

புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்

ஒன்பது ஓட்டைக்குள்ளே

ஒருதுளிக் காற்றை வைத்து

சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன்

தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று

பற்றறுத்து வந்தவர்க்கு

சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்

தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே

தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே

தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்

தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

வெள்ளருவிக் குள்ளிருந்து

மேலிருந்து கீழ்விழுந்து

உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை

உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

வானவெளிப் பட்டணத்தில்

வட்டமதிச் சக்கரத்தில்

ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை

நாடிவிட்டால் அவன்தான் இறைவன்

அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே

ஆசைமலர் பூத்திருந்தால்

நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை

நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்

கற்றவர்க்குக் கண் கொடுப்பான்

அற்றவர்க்குக் கை கொடுப்பான்

பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை

பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்

பஞ்சுபடும் பாடுபடும்

நெஞ்சுபடும் பாடறிந்து

அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்

ஆறுதலைத் தந்தருளும் இறைவன்

கல்லிருக்கும் தேரைகண்டு

கருவிருக்கும் பிள்ளை கண்டு

உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதை

உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்

முதலினுக்கு மேலிருப்பான்

முடிவினுக்குக் கீழிருப்பான்

உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை

உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

நெருப்பினில் சூடு வைத்தான்

நீரினில் குளிர்ச்சி வைத்தான்

கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்

கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்

உள்ளத்தின் உள் விளங்கி

உள்ளுக் குள்ளே அடங்கி

உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர்

உருவமில்லா அவன்தான் இறைவன்.

கோழிக்குள் முட்டை வைத்து

முட்டைக்குள் கோழி வைத்து

வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த

ஏழையின் பேர் உலகில் இறைவன்

சின்னஞ்சிறு சக்கரத்தில்

ஜீவன்களைச் சுற்ற வைத்து

தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்

தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்

தான் பெரிய வீரனென்று

தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்

நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான்

நாடகத்தை ஆடவைத்த இறைவன்..

Thursday, January 25, 2018

திருமூலர் அருளிய சூட்சும சிவ மந்திரங்கள்

Wednesday, January 24, 2018

தீட்டு கட்டுப்பாடுகள் எதுவும் ருத்ராட்சத்திற்கு கிடையாது யார் வேண்டுமானாலும் அணியலாம்


இன்று பலர் கேட்கும் கேள்வி ஐயா நான் அசைவம் சாப்பிடலாமா, ருத்ராட்சம் அணியலாமா, அசைவம் சாப்பிடலாமா என்ற கேள்விக்கு பின் புலத்திலேயே அவர் அசைவ பிரியர் என்பது நன்றாக தெரிகிறது.. அசைவம் சாப்பிடுவதை விட அதை நினைத்து கொண்டே இருப்பது அதை விட பெரிய பாவம்... வடிவேலுவின் நகைச்சுவை தான் இதற்கு சரியான உதாரணம் புது செருப்பு ஒன்று கோவில் வாசலில் வைத்து விட்டு அதே நினைவுடன் சன்னதியில் சூடத்தை ஒரு நொடி கண் னில் ஒற்றிகொண்டு பார்க்க செருப்பு காணாமல் போகும் நகைச்சுவையாக இருந்தாலும் சிந்தித்து பாருங்கள் அங்கே வேண்டுதலும் சரி ஆசையும் சரி இரண்டுமே நிறைவேறுவது இல்லை.. உங்களுக்கு அசைவம் பிடிக்கும் எனில் சாப்பிடுங்கள் தவறில்லை அசைவத்தையும் ஆன்மிகத்தையும் போட்டு குழப்பிகொள்ளாதிர்.. ஏதோ நீங்கள் பிறந்து அசைவம் புதிதாக சாப்பிட ஆரம்பித்து விட்டது போல நினைத்து வருந்ததேவையில்லை உங்கள் மரபுரிதியாக தொடர்வதே... நீங்கள் ஆன்மிகத்தில் தெய்வ சிந்தனையில் உங்கள் மனம் முழுமையாக செல்ல செல்ல இது போன்ற எண்ணங்களில் பற்று அற்ற நிலை உருவாகும் அது வரை இறுக்கநிலையில் இருந்து விடுபட்டு ஒரு இயல்பான வாழ்க்கையை வாழுங்கள்..

கண்ணப்பர் கதை தெரியாதவர்கள் இருக்க முடியாது அவர் இறைச்சியை இறைவனுக்கு படைத்ததை இன்றளவும் யாரும் பேசுவதில்லை அவர் இறைவன் மீது வைத்த அன்பின் காரணமாக ரத்தம் வழிந்த ஈசனின் கண்களை பார்த்து மனம் பதறி தன் கண்களை எடுத்து இறைவனின் கண்களாக பொருத்தியதை தான் பேசுகிறோம்.. இங்கே அவரது அன்பை என்னவென்று விவரிப்பது அது போல தான் நாம் இறைவன் மீது வைக்கும் அன்பே நம்மை வழிநடத்தும். இன்றும் சிவ ருத்ரனின் அம்சமான காவல்தெய்வங்களுக்கு பலி தருவதை பாரம்பரியமாக செய்து வருகிறோம். சிறு புற்கள் முதல் யானை வரை உயிர் என்பது ஒன்றுதான். . ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் ( ருத்ராட்சம்) அவன் மீது நம்பிக்கையும் அன்பும் இருந்தால் போதும் ருத்ராட்சம் அனைத்துக்கும் அப்பாற்பட்டது தீட்டு கட்டுப்பாடுகள் எதுவும் ருத்ராட்சத்திற்கு கிடையாது யார் வேண்டுமானாலும் அணியலாம் உங்கள் மனதையும் வாழ்வையும் வளப்படுத்தும்... தினமும் திருநீறில் மகிழும் ஈசனை நினைத்தும் மஹாலட்சுமியையும் குலதெய்வத்தையும் ஆத்மார்த்தமாக மனதில் நினைத்து கட்டைவிரல் மோதிரவிரலில் படும் படி எடுத்து நெற்றியில் இட அனைத்து இடர்களும் நீங்கி வாழ்வு வளப்படும்.

Sunday, January 21, 2018

அனைத்து நோய்களும் குணமாக சித்தர்கள் சொன்ன ஒரு அபூர்வ ரகசியம்

Wednesday, January 17, 2018

நம்மை அறியாமலேயே நம்மை ஆட்கொள்ளும் பூதகணங்கள்

பூதகணங்கள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். பழமையான கோவில் கோபுரங்களில் உள்ள நான்கு திசைகளிலும் வீற்றிருக்கும் இவைகள் சிவபெருமானுக்கும் மகாசாஸ்தாவுக்கும் சேவை செய்ய பிறப்பிக்கப்பட்டவை. இவைகள் நம் வாழ்விலும் சில இன்ப துன்பங்களை ஏற்படுத்தவல்லவை ஆகும். இதைப் பற்றி பழம்பெரும் கிரந்தங்களில் பல குறிப்புகள் உண்டு. இவைகள் தற்காலத்திற்கும் பொருந்தும். கீழே கொடுக்கப்பட்டுள்ள 33 பூதகணங்களும் நமக்கு எப்பேர்ப்பட்ட நன்மைகள் மற்றும் சோதனைகளைத் தரும் என்று பார்ப்போம்.

 • காம பூதம்: பெயரே விளக்கம் தரும் ஒருவரை காமத்தின் மூலம் மோகம் கொண்டு அலையச் செய்து வீணாக்கும் 
 • ராட்சச பூதம்: மனிதனை ராட்சச குணம் கொள்ளச் செய்யும் 
 • வேதாள பூதம்: அடுத்தவரை மதியாதிருத்தல் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுதல் 
 • கிரண பூதம்: மதுவுக்கு அடிமையாக்கும் துர் சகவாசம் ஏற்படுத்தும் 
 • க்ஷூஷ்மாண்ட பூதம்: நல்ல சகவாசம் தரும் ஆன்மீகத்தில் பிரியம் ஏற்படுத்தி நற்காரியங்களில் ஈடுபட வைக்கும் 
 • யக்ஷ பூதம்: தற்கொலைக்குத் தூண்டும் 
 • பைசாச பூதம்: தெய்வத்தை நிந்திக்கச் செய்யும் 
 • ஸித்த பூதம்: ஞானம் அளிக்கும் 
 • குரவ பூதம்: பிறருக்கு ஞானத்தைப் போதிக்கச் செய்யும் 
 • கந்தர்வ பூதம்: யௌவன (அழகிய ) தேகத்தை தரும் 
 • அசுர பூதம்: ப்ராஹ்மண துவேஷம் ; ஞானிகளை நிந்தித்தல் ; மாமிசம் மீது பிரியம் கொள்ளச் செய்யும் 
 • முனி பூதம்: சாஸ்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும் 
 • விருத்த பூதம்: உடல் கோணலைக் கொடுக்கும் 
 • தேவ பூதம்: தேவர்கள், சித்தர்கள், மகான்கள், பெரியோர்கள் இவர்களிடத்தில் நம்மை நாட்டம் கொள்ளச் செய்யும் 
 • வருண பூதம்: நீர் நிறைந்த பிரதேசத்தில் வாசம் கொள்ளச் செய்யும் 
 • அர்த்த பிதா பூதம்: சோம்பலைக் கொடுக்கும் 
 • ஈசுர பூதம்: சரித்திரத்தில் நாட்டம் கொள்ள வைக்கும் 
 • வித்தியுன்மாலி பூதம்: பயம் கொள்ளச் செய்யும் 
 • நிகட பூதம்: பெண்கள் மீது நாட்டம் கொள்ளச் செய்யும் 
 • மணிவரை பூதம்: எவற்றின் மீதும் பயம் இல்லாத தன்மையையும் அதீத கோபத்தையும் கொடுக்கும் 
 • குபேர பூதம்: தன விருத்தி தந்தருளும் 
 • விருபாட்ச பூதம்: தேகத்தில் வலிமை உண்டாக்கும் 
 • சக பூதம் : பித்தம்; சதா பயம் தரும் 
 • சாகோர்த்த பூதம்: நிர்வாண நிலையில் தெருவெங்கும் ஓட வைத்து ஞான ( முற்றும் துறந்த ) நிலை தரும் 
 • யாக சேனா பூதம்: பெருமை ; தற்புகழ்ச்சி தரும் 
 • நிஸ்த்தேச பூதம்: பெண்களை இம்சித்து புசித்தல், குரோத எண்ணம் கொண்டு தரும் 
 • இந்திர பூதம்: குறையாத தனத்தைத் தரும் 
 • நாக பூதம்: மலை வாசம் மற்றும் மயான வாசம் தரும் 
 • விசாக பூதம்: எல்லோரையும் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருக்கும் 
 • கசுமால பூதம்: அதீத ( பெருந்தீனி ) தீனி கொள்ளச் செய்யும் 
 • அசாத்ய பூதம்: வலியச் சென்று மற்றவரை சண்டைக்கு இழுக்கும் 
 • பித்த பூதம்: மன சுழற்சி மற்றும் பைத்திய நிலைக்கு தள்ளும் 
 • பிரம்மராட்சச பூதம் : தேவர்கள் ; முனிவர்கள் ; பிராம்மணர்கள் இவர்களிடம் விரோதம் கொள்ள வைக்கும்.

மேற்கண்டவற்றை நாம் ஆழ்ந்து நோக்கினால் நம்மிடம் நாம் பார்க்கும் பலரிடமும் மேற்கண்ட குணங்களை காணலாம். இவைகள் அனைத்தும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்டவை ஆகும்.

Monday, January 15, 2018

முதல் சிவ பக்தன்

#சிவ_நகரம்_மதுரை #அருள்மிகுநந்திபகவான்


🐂#முதல்சிவபக்தன்🐂

நந்தி (காளை) என்பவர் இந்துக் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் கயிலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார். சைவ புராணங்கள் படி இவர் நாத சைவத்தின் எட்டு சீடர்களின் தலைமைக் குருவாகக் கருதப்படுகிறார். நந்தி உருவம் பதித்த கொடி சைவ சமயத்தவரின் கொடியாகக் கருதப்படுகிறது. பொதுவாக சிவாலயங்களில் ஐவகை நந்திகளின் சிலைகள் அமைந்திருக்கும்.


#மந்திரம் 

ஓம் தத் புருஷாய வித்மகே சக்ர துண்டாய தீமஹி தந்நோ நந்தி ப்ரசோதயாத்

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. அதுவிடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.


ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.


சிலாத முனிவர் என்பவருக்கு வீதாஹல்யர் என்ற பெயரும் உண்டு. அவர் மனைவி பெயர் சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாகியும் புத்திரபேறு இல்லை. அதனால் அவர் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு தரிசனம் கொடுத்தார். முனிவரே, நீங்கள் எப்போதாவது யாகம் செய்வதற்காக நிலத்தை உழும் போது, என்னைப் போன்று வடிவுடன் அழகான ஒரு புதல்வரை பெறுவீர்கள் எனக்கூறி மறைந்தார்.


சிலகாலம் கழித்து சிலாத முனிவர் யாகம் செய்ய எண்ணி நிலத்தை உழுதபோது, ஏர்க்காலில் தட்டுப்பட்ட ஒரு செப்பு பெட்டகத்தை மண்ணிற்குள் இருந்து எடுத்தார். அதில் ஒரு அழகான ஆண் குழந்தை இருந்தது. அதற்கு 4 கால்கள் இருந்தன. மேலும் சிவனைப்போல் ஜடா முடியுடனும் காணப்பட்டது. சிவ வாக்கினை நினைவு கூர்ந்த முனிவர் அக்குழந்தைக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டினார். 14 ஆண்டு காலம் சகல கலைகளிலும், வேத ஆகம புராண சாத்திரங்களிலும் வல்லவரானார் செப்பேசன்.


ஒரு முறை அவர் ஆழ்ந்த சிவ சிந்தனையில் இருந்தார். அப்போது அவர் சிவனுடைய அந்தரங்க காவலராக இருந்ததும், அப்போது ஆடி என்ற அசுரனை சிவபெருமான் உத்தரவு இல்லாமல் அனுப்பியதால் சிவபெருமானால் சபிக்கப்பட்டு இப்பூமியில் பிறந்தது நினைவுக்கு வந்தது. பிறகு சிவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தைக் கண்டு மன மகிழ்ந்த பரமேசுவரன் அவர் முன் தோன்றி, செப்பேசருக்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கங்கை நீர், இறைவியின் கொங்கை நீர், இடப வாய்நுரை நீர் ஆகிய ஐந்து வகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து தங்கப்பட்டம் அணிவித்து நந்தீஸ்வரர் என பெயர் சூட்டினார்.

Natural Thamara Mala Tamarai Mala Lotus Seed Mala Lotus Beej Mala Kamal Gatta Mala Lakshmi Puja

அத்துடன் சிவன், தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும் நந்தீஸ்வரருக்கு அளித்தார். பின்னர் பட்டு சாத்தி, முடி அணிவித்து வீதி உலாவாக நந்தி தேவரை எடுத்து செல்கின்றனர். அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல், அவர் வாகனமாகவும் ஆனார். அதனால் அவர் நந்தி தேவர் என்று அழைக்கப்பட்டார்.

Divya Shakti Green Agate Hakik Japa Mala 108 + 1 Beads ( 5 mm )

பரமேஸ்வரன் நந்தீஸ்வரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அவருக்கு திருமழப்பாடியில் வாழ்ந்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசை என்ற பெண்ணை பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் செய்துவைத்தார்.

நந்தியின் தவமும் ஈசன் தந்த பட்டமும்

சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன், வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர். நந்தி தன் தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு, சிவதவம் செய்யக் கிளம்பினார். முந்நூறு வருடங்கள் கடும் தவம் செய்தார் நந்தி. இறுதியாக அவரின் தவத்தினால் மகிழ்ந்த ஈசன், நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார்.


நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புதக் காட்சி ஒன்று நாகை மாவட்டம், ஆத்தூர் மந்தாரவனேசுவரர் ஆலய கோஷ்டத்தில்- கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்ப வடிவில் உள்ளது. தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான் சிவாலயங்கள்தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.

Divya Shakti 100% Original Panch Mukhi Rudraksh Mala in 108+1 beads ( 6 MM)

சிவபெருமான் இருக்குமிடம் கயிலாயம். சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். எதையாவது செய்ய முடியாமல் யாராவது தடுத்தால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்பார்கள். நந்தியின் வேலை தடுப்பதுதான்.


முப்புரம் எரிப்பதற்காக சிவன் புறப்பட்டார். அப்போது அச்சு முறிந்தது. விஷ்ணு நந்தியாகி, தேரினைத் தாங்கினார். தர்மதேவதை சிவனுக்கு நந்தியானார். அந்த நந்திதான் சிவாலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் நந்தியாகும். அந்த நந்திக்கும் மூலவருக்கு இடையில் குறுக்கே போகக் கூடாது என்பார்கள். தர்ம நந்தியின் மூச்சுக்காற்று மூலவர்மீது பட்டுக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.நன்றி:
#ௐநமச்சிவாய
#adv.roopesh.cbe#