Sunday, May 15, 2016

thumbnail

9 பவுர்ணமி நாட்கள் குலதெய்வப் பூஜை செய்து வந்தால் கடன் சுமை படிப்படியாகக் குறையும்ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்முடைய இந்த பிறவி பயன், பலன் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தை பொறுத்தே உள்ளது என்பதுதான் அந்த வார்த்தையின் அர்த்தம். ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியமானதாகும்.

இந்த ஸ்தானத்தில் இருந்துதான் மற்ற அமைப்புகளை கணக்கிடுகிறோம். லக்னம் ஒன்றாம் இடம். இதற்கு அடுத்த வீடு தனஸ்தானம் எனும் இரண்டாம் இடம். இந்த வரிசையில் ஆறாம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும். ருணம் என்றால் கடன். ரோகம் என்றால் வியாதி. சத்ரு என்றால் எதிரி. இந்த ஆறாமிடமும், ஆறாம் அதிபதியுமே கடன் பிரச்னையை ஏற்படுத்தக் கூடியவர்.

பணப்பிரச்னை என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்துவிடுகிறது. ஒரு சில மகா பாக்கியவான்களை தவிர மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது.

இதில் சுபவிரயமும், அசுபவிரயமும் அடக்கம். மகன், மகள் கல்வி செலவு, பிள்ளைகள் திருமணம், வியாபாரம், தொழில், வழக்குகள், ஆடம்பர வாழ்க்கை, மருத்துவ செலவுகள் என பல விஷயங்கள் நம்மை கடனாளி ஆக்குகிறது. ஜாதக பலம் உள்ளவர்கள் இதில் இருந்து மீண்டு வந்துவிடுகிறார்கள்.

எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் கடன் தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

சென்ற பிறவியில் செய்த தவறுகளால் இந்தப் பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லையிலிருந்து மீள, 3 பவுர்ணமி நாட்களில் அவரவர் குலதெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன் தொல்லை படிப்படியாகக் குறையும். கடனை அடைத்துவிடலாம்.

குலதெய்வம் அருகில் இல்லாமல் வெகு தூரத்தில் வசிப்பவர்கள், அவர்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசையை நோக்கி 5 முக நெய்விளக்கு ஏற்றி, 9 பவுர்ணமி நாட்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் கடன் சுமை குறையும். 90 நாட்களுக்குள் கடனை அடைத்துவிடலாம். உங்களுக்கு வரவேண்டிய பாக்கி இருந்தாலும் வசூலாகிவிடும்.

9 பவுர்ணமி நாட்கள் குலதெய்வப் பூஜை செய்து வந்தால் கடன் சுமை படிப்படியாகக் குறைந்து, 90 நாட்களில் பெருமளவு கடனைக் கட்டி நிம்மதி பெறலாம்.

மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும் குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும்.

தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும். தினசரி சரவணபவ என்று 108 முறை எழுதி வரலாம்.

“ ஓம்ஸ்ரீம் கம்ஸௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக...”

இந்த மந்திரத்தை தினசரி 108 முறையோ அல்லது அதற்கு மேலோ நம்பிக்கை, சிரத்தையுடன் மனதுக்குள் ஜெபித்து வந்தால் கடன்தொல்லை நீங்கும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email