கன்றுக்குட்டி, மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது
நிலையில் அமரக்கூடாது
மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது
துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது
நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
ஆண்கள் செய்யக்கூடாத செயல்கள்
ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்போது, பிரேதத்தின் பின் போகுதல், முடிவெட்டுதல், மலை ஏறுதல், சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல், வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது. மேலும் கணவன் கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.