நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் நம்மை தேடி பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர்.
மஹாளய பட்சம் என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வே தேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன. அகவே அந்த மஹாளய பட்ச காலத்தில் அவசியம் பித்ரு தேவதைகளுக்க தர்ப்பணம், ஹிரண்ய ச்ரார்த்ம், அன்ன ச்ரார்த்தம் இம்மூன்றுள் எதையேனும் ஒன்றை விடாமல் செய்ய வேண்டும். பித்ருகடனை அவர்கள் தீர்ப்பதற்கு உதவும் புண்ணியம் உங்களுக்கும் கிடைக்கும். உங்கள் பித்ருக்களும் மகிழ்ந்து நல்லாசி வழங்குவார்கள்.
சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும். நாம் இங்கு செய்யும் சிரார்த்தம் தர்ப்பணம் மூலம் தான் அவர்களுக்கு உணவும் நீரும் கிடைக்கும். எனவே அந்த கடமையை செய்ய நாம் தவறுகிற போது அவர்கள் பசி தாகத்தால் அவதிப்பட்டு சபிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே உங்கள் நீத்தார் கடனை தீர்க்க இந்த மஹாலய காலத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.