நம் பிறவி எதற்க்காக?

சரீரம் வேண்டி நிராதரவாக அன்று இறை சபையில் நின்று கதறி அழுது இந்த பிறவியை எதற்க்காக யாசித்து பெற்றாய்.

 நம் பிறப்பு எதற்காக?

வயிற்று பிழைப்புக்கு கல்வியோ?
ஊயிர் வாழ அடிமை உத்தியோகமோ?
தினவெடுத்த வாலிப உடல் பசி தீர பெண்டோ?
குலம் வாழ மகனோ மகளோ?
மகனுக்கொர் வீடோ?
மகளுக்கோர் வீடோ?
அவர் வாழ மருமகனோ மருமகளோ?
பேர குழவிகளுக்கு கல்வியோ?
அவர்களுக்கும் திருமணமோ?

இப்படி உம் ஆசை நீண்டு கொண்டே போனால் அறுபது பிராயம் கடந்தபோதும் தீராத ஆசை?

கடுகவே எமன் வந்து அழைக்கும்போது சரீரம் உனை விட்டு நழுவும் பொது நீ எதை எல்லாம் லட்சியம் என்று நினைத்து உம் வாழ்வை வீனடித்தாயோ அவை யாவும் கனவாகி மறைந்தும் மறந்தும் போகும்.

அப்போது நீ அநாதை ஆகி போவாய்?

வாழும்போதே மேற்கண்ட அனைத்தையும் தேவைக்கு மட்டும் அடைந்து கொண்டே சுய நலமியாக உன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமான உன் கடவுளை உன் உயிரை உன் உரிமையான மெய் வீடாம் முக்தி அடையும் வழியை தேடு.

தாமரை இலையும் நீரும் போல உலகில் வாழ பழகு.
நீ சேர்க்கும் தர்மமே உம்மை மெய் லோகம் கொண்டு சேர்க்கும். 

உம் அழிக்க முடியாத சொத்து, அபகரிக்க முடியாத சொத்து உம் தர்மம் மட்டுமே. 

அடாத வறுமையிலும் விடாது தர்மம் செய்யும் எண்ணம் கொள்....


"வாழ்க வளமுடன்"

படித்ததில் ரசித்தது