Skip to main content
















லிங்க வடிவில் சிவபெருமானை வழிபடுவது ஏன்?

லிங்க வடிவில் சிவபெருமான் இருப்பது தெரிய வந்ததற்கு முக்கிய காரணம் பிரம்மாவும், விஷ்ணுவும் தான். இது குறித்த ஆன்மிக கதையை பார்க்கலாம்.

மூம்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவபெருமான். மற்ற கடவுள்களை மனித உருவ சிலைகளால் வணங்குவோம். ஆனால் சிவபெருமானை பெரும்பாலும் லிங்க வடிவில் தான் நாம் பூஜை செய்து வணங்குவோம். இப்படி லிங்க வடிவில் சிவபெருமான் இருப்பது தெரிய வந்ததற்கு முக்கிய காரணம் பிரம்மாவும், விஷ்ணுவும் தான்.

மேலும் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு இடையே யார் பெரியவர் என்ற சண்டை வந்தது. அந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது சிவபெருமான் தான். இங்கு லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் வந்த கதை கொடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மா படைக்கும் கடவுள் என்றால் விஷ்ணு காக்கும் கடவுளாவார். அவர்கள் இருவரும் சேர்ந்து வேலை பார்த்து வந்த போது அண்டம் நன்றாக இருந்தது. இருப்பினும் பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் ஒரு முறை சண்டை வந்தது. அப்போது "பிரம்மா, நான் காக்கும் கடவுள். நான் உன்னை விட மிகப்பெரியன்.", என விஷ்ணு கூறினார்.

இதை கேட்டு கோபமடைந்த பிரம்மன், "நான் மட்டும் எதையும் படைக்கவில்லை என்றால் உமக்கு வேலையே இருந்திருக்காது..." என கூறினார். "என்னை தான் பலரும் வணங்குகின்றனர்" என விஷ்ணு கோபமாக கூறினார். இந்த சண்டை மிகப்பெரியதாக வளர்ந்து கொண்டே போனது. இதனால் மற்ற கடவுள்கள் சிவபெருமானிடம் சென்றனர். தான் இதனை கவனித்துக் கொள்வதாகவும், அவர்களை அமைதியுடன் செல்லுமாறும் சிவபெருமான் கேட்டுக் கொண்டார்.

விஷ்ணுவும் பிரம்மனும் ஒருவரை ஒருவர் கோபமுடன் பார்த்துக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு இடையே ஒரு பெரிய தூண் ஒன்று உருவானது. இந்த தூண் மிகப்பெரியதாக இருந்ததால் அது எங்கே தொடங்குகிறது, எங்கே முடிவடைகிறது என்பதை விஷ்ணுவாலும் பிரம்மனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சண்டையை மறந்துவிடக் அந்த இருவரும் ஒன்றாகினர். "இது என்னவாக இருக்கும் விஷ்ணு? நீங்கள் இதனை....", என பிரம்மன் அதை சுட்டிக்காட்டி கேட்டார். விஷ்ணு தலையை அசைத்தார். "இந்த தூண் எவ்வளவு பெரியது என்பதை பார்க்கலாம். நான் மேலே செல்கிறேன்..." என்றார் பிரம்மன். அதனை ஒப்புக்கொள்ளும் விதமாக தலையை அசைத்தார் விஷ்ணு, "நான் கீழே செல்கிறேன்" என கூறினார்.

அன்ன உருவத்தை எடுத்த பிரம்மன் மேலே பறந்தார். பன்றி உருவத்தை எடுத்த விஷ்ணு கீழ் நோக்கி சென்றார். மேலே மேலே பிரம்மன் சென்ற போதிலும் கூட தூணின் ஆரம்பம் வந்த பாடில்லை. இது என்னவாக இருக்கும் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கும் என பிரம்மன் நினைத்தார். திடீரென பிரம்மனுக்கு ஒரு யோசனை வந்தது, "விஷ்ணு ஒரு வேளை கீழே தூணின் அடிப்பகுதிக்கு முதலில் சென்று விட்டால்? பிறகு என்னை விட அவர் தான் சிறந்தவர் என மீண்டும் என்னை பார்த்து கேலி செய்வாரே.". மிகவும் அதிவேகத்தில் பிரம்மன் பறக்க தொடங்கினார். ஆனாலும் அவரால் தூணின் முடிவை கண்டுபிடிக்க முடியவில்லை.

பறந்து கொண்டிருக்கும் போது அழகிய தாழம்பூவை பிரம்மன் கண்டார். "தாழம்பூ மலரே, நீ மிகவும் அழகாக இருக்கிறாய், நீ என்ன செய்கிறாய்"? என பிரம்மன் கேட்டார். "இந்த தூணிற்கு அர்பணிக்க நான் அனுப்பப்பட்டுள்ளேன். காற்று அடிக்கும் போது, தூணின் மீது நான் வீசப்பட்டேன். ஆனால் இந்த தூண் மிக நீளமாக இருப்பதால், சில வருடங்கள் ஆகியும் கூட நான் தூணின் மீதே இருக்கிறேன்." என அது கூறியது.

பூவை பார்த்த பிரம்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது. "தாழம்பூவே, நீ இந்த தூணின் மீது இருந்துள்ளாய். உனக்காக நான் ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன். எனக்காக ஒரு பொய் சொல்ல முடியுமா?" என பிரம்மன் கேட்டார். சந்தேகத்துடன் பிரம்மனை பார்த்த அந்த மலர் பயத்துடன் சிரித்தது. "யார் சிறந்தவர் என்பதை அறிய, நான் விஷ்ணுவிடம் ஒரு பந்தயம் போட்டிருந்தேன். அப்போது தான் இந்த தூண் எங்களுக்கு இடையே வந்தது. தூணுக்கு மேலே நான் சென்றேன். தூணுக்கு கீழே விஷ்ணு சென்றார். நான் உன்னை எடுத்துக் கொண்டு உன்னை தூணின் உச்சியில் பார்த்தேன் என விஷ்ணுவிடம் கூறுவேன். நீயும் அதையே கூறு. அப்போது நான் விஷ்ணுவை விட வலிமையானவனாக இருப்பேன்" என பிரம்மன் கூறினார். மெதுவாக தலையை அசைத்த தாழம்பூ, "நான் இந்த கதையையே சொல்கிறேன்" என கூறியது.

சந்தோஷமடைந்த பிரம்மன் அந்த மலரை தன் கையில் எடுத்து பரக்க ஆரம்பித்தார். பன்றி வடிவில் இருந்த விஷ்ணுவை சந்தித்தார் பிரம்மன். விஷ்ணுவாலும் அடிப்பாகத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை பிரம்மன் தெரிந்து கொண்டார். சோர்வடைந்திருந்த விஷ்ணு பிரம்மனை சந்தித்தார். "பிரம்மா, உங்களால் ஆரம்பித்த பகுதியை காண முடிந்ததா?" என விஷ்ணு சோர்வுடன் கேட்டார்.

பெருமையுடன் மலரை எடுத்த பிரம்மன், "ஆம் தூணின் ஆரம்பத்தை நான் கண்டு விட்டேன்" என கூறினார். நம்ப முடியாத பார்வையோடு பிரம்மனை விஷ்ணு பார்த்தார். "அதற்கு சாட்சியாக நான் இந்த மலரை எடுத்து வந்துளேன்", என பிரம்மன் மேலும் கூறினார். தாழம்பூவை அவர் தூணின் மீது வைத்தார். "இந்த மலர் தூணின் உச்சியில் இருந்தது. அதனை நான் எடுத்து வந்துள்ளேன்." என பிரம்மன் சற்று நடுக்கத்துடன் கூறினார். "ஆம் விஷ்ணு பகவானே, பிரம்மன் கூறுவது உண்மையே. நான் தூணின் உச்சியில் இருந்தேன். பிரம்ம தேவன் தான் என்னை இங்கு அழைத்து வந்தார்", என தாழம்பூ கூறியது.

நொந்து போன விஷ்ணு, "மிக நல்லது பிரம்மா அவர்களே... என்னால் கீழ் பகுதிக்கு செல்ல முடியவில்லை. நான் கீழே சென்றேன், சென்றேன், சென்று கொண்டே இருந்தேன்.... ஆனால் தூண் முடியுமாறு தெரியவில்லை." என கூறினார். "அப்படியானால் நான் தான்...." என கிண்டலாக சிரித்தார் பிரம்மன்.

பிரம்மனுக்கு அதிசயம் தரும் வகையில் அந்த தூண் இரண்டாக பிளந்தது. தூணில் இருந்து 3 கண்களை கொண்ட சிவபெருமான் வெளியே வந்தார். தங்கள் முன் சிவபெருமான் சக்தியோடு தோன்றியதை கண்டு மிரண்டு போய் நின்றார்கள் பிரம்மனும் விஷ்ணுவும். வாயை பிளந்து கொண்டு நின்ற பிரம்மனை பார்த்த சிவபெருமான், " தூணின் உச்சியை நீர் கண்டீரா." என கேட்டார்.

பிரம்மன் எதுவுமே பேசவில்லை. கீழே குனிந்து கொண்டு அமைதியாக இருந்தார். எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்த பிரம்மனை பார்த்த சிவபெருமான், "நீர் பொய் சொல்லிவிட்டீர் பிரம்மா! நானே இந்த தூண். இது ஒரு சுயம்பு லிங்கம். என்னை சுலபமாக கண்டு கொள்ள கூடிய ஒரு வடிவம். இந்த லிங்கத்திற்கு தொடக்கமோ முடிவோ கிடையாது. நான், நீர் மற்றும் விஷ்ணு என மூன்று பேருக்குமே தனித்தனி வேலைகள் உள்ளது. அது தான் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல். நம்மில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடமில்லை.", கோபத்துடன் கூறினார். "நாம் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டுமே தவிர இப்படி சண்டையிடக் கூடாது." என்றும் கூறினார்.

சிவபெருமானிடம் பிரம்மனும் விஷ்ணுவும் மன்னிப்பு கோரினர். இருப்பினும் சிவபெருமான் அதோடு நிறுத்தவில்லை. "பிரம்மா, தங்களின் பொய்க்காக நான் உங்களை சபிக்கிறேன்... உங்களை இனி யாரும் வணங்க மாட்டார்கள்." என சிவன் கூறினார். பின் மிகுந்த கோபத்துடன், "தாழம்பூவே, இனி நீ பூஜைக்கு பயன்படுத்தப்பட மாட்டாய்" என்றும் கூறினார். இதனை பிரம்மனும் அந்த மலரும் மறுக்கவில்லை. தங்களின் பொய்க்கான விலை இது என அமைதி காத்தனர்.

இந்தியாவில் பிரம்மனுக்கு குறைந்த அளவிலான கோவில்களே உள்ளது. அவர் தானியாக வழிப்படப்படுவதும் மிக அரிதே. சிவபெருமானின் சாபமும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இன்று அளவிலும் தாழம்பூவை பூஜைக்கு யாரும் பயன்படுத்துவதில்லை. சிவபெருமான் எப்போதும் லிங்கத்தின் வடிவில் தான் வழிப்படப்படுகிறார். இதுவே அவரின் சின்னமாக பார்க்கப்படுகிறது. பிரம்மன் மற்றும் விஷ்ணுவுக்கு இடையேயான சண்டையை தீர்ப்பதற்கு தான் முதன் முதலில் இந்த வடிவத்தை சிவபெருமான் எடுத்தார்.




Popular posts from this blog

அமானுஷ்ய குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது
அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று
விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண் ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது. குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

வீட்டில் செல்வம் செழித்து வளமாக வாழ

1. ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள். 
2.படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம். 
3.வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும். வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும். 
4.உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் .. 
5. உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல் போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்…

வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக சூட்சுமங்கள்

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க…